பன்றி எண்ணெய்.
பன்றிக் கொழுப்பை உருக்கி எடுக்கப்படுகிறது பன்றி எண்ணெய். பப்புவா நியூ கினி மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்தது பன்றி எண்ணெய். தமது கடினமான சுருள் முடியை இலகுவாக கையாள்வதற்கும் முடி நன்றாக வளர்வதற்கும் இதை முடியில் தடவுகிறார்கள். பன்றி எண்ணெயின் வாசம் பிடிக்காத சிலர் இதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாவிப்பமுதுண்டு. காயங்கள் மற்றும் வீக்கங்களுக்கும் பன்றி எண்ணெயயை தடவுவது அவர்களது பாரம்பரியம். பப்புவா நியூ கினி மக்களின் வாழ்வோடு பன்றி ஒரு பிரிக்கமுடியாத அம்சம். இதனால் பன்றி எண்ணெய் ஒரு செலவில்லாத பொருளும்கூட. தமது ஆரோக்கியத்திற்கு பன்றி எண்ணெயும் ஒரு காரணம் என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை. நானும் தலையில் சிறிது தடவிப் பார்ப்போம் என நினைத்து பின்னர் ஏன் இந்த வேண்டாத வேலை என்று எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். நான் கண்ட பல வயதான பப்புவா நியூகினியர்களுக்கு வழுக்கை விழுந்திருப்பதற்கு ஒருவேளை பன்றி எண்ணெயும் காரணமோ என மனதில் தோன்றியதால் பின்வாங்கிவிட்டேன். ஆனாலும் ஒருமுறை உபயோகித்துப் பார்க்கவேண்டும். பார்ப்போம்.
